Saturday, June 26, 2010

சந்திரயானின் நிலவுப் பயணமும் நிலவில் நீர் கண்டுபிடிப்பும்












மனிதன் சிந்தனை சக்தி பெற்று தான் பிறந்த மண்ணையும்தனக்கு மேலுள்ள விண்ணையும் ஆராயத் தொடங்கிய நாள் முதல் நிலவு மனித எண்ணங்களை வசீகரித்து உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், கடந்த நூற்றாண்டில் தோன்றிய விண்வெளி யுகம் வருவதற்கு முன்பு வரை நிலவினப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை. தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வந்த பிறகே நிலவினப் பற்றிய உண்மைகளும் பலப்பல புதிய தகவல்களும் நமக்குக் கிடைக்கப் பெற்றன.
சென்ற நுற்றாண்டின் முதல் பகுதியில் நடைபெற்ற இரண்டு உலகப்போர்கள் உலகின் பரிமாணத்தை வெகுவாக மாற்றி அமைத்தன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு இவை அடிகோலின. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் ஜெர்மனியில் இருந்த அறிவியலாளர்களை தங்கள் பால் ஈர்த்து அவர்களுக்கு அடைக்கலம் தரும் நோக்கில் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றன. அப்படி அமெரிக்காவுடன் சென்ற குழுவில் முக்கியமானவர் வெர்னர் வான் ப்ரான் என்ற வானவூர்தி பொறியியலாளர். விண்வெளி யுகத்தில் விண்செலுத்தி (ராக்கெட்) ஆராய்ச்சிக்கும், வடிவமைப்பிற்கும், செயலாக்கத்திற்கும் முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
இரண்டாம் உலகப்போருக்குப் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்த போது, விண்வெளி ஆராய்ச்சியும் இதன் ஒரு பங்காக சூடு பிடித்தது. வானவூர்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அப்போது அடிக்கோல்கள் நாட்டப்பட்டன.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற கால்பந்து அளவுள்ள செயற்கைக் கோளை விண்ணில் ஏவி மனித இனத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக லூன எனப்படும் செயற்கைக் கோள்கள் தொடரை வரிசையாக ஏவி நிலவுப் பயணத்திற்குக் வெற்றிகரமாக அடிக்கல் நாட்டியது.
பனிப்போரின் இந்த முக்கிய நிகழ்வினை மீரும் விதத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபத்ய் ஜான் கென்னடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறுபதுகள் முடிவதற்கு முன்பாக மனிதனை நிலவின் தரையில் கால் வைக்கச் செய்யப் போவதாக அவர் திட்டவட்டமாக அறிவித்தார். அமெரிக்காவின் நாசா என்ற விண்வெளிக் கழகம் கென்னடியின் வார்த்தைகளை செயல்படுத்தியது. ஜூலை 29, 1969ம் நாள் மனித இன வரலாற்றில் ஒரு மகோன்னதமான தினமாக உருவானது. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் என்ற இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள் அபொல்லோ-11ந் ஈகிள் விண்கலத்தின் உதவியுடன் நிலவில் தரையிறங்கி மிகப்பெரிய சாதனை படைத்தனர்.
இங்கே இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு அப்போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்த நேரம். சோவியத் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இணையாக விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நாட்டிற்கும் கொண்டு வர இயலும் என்ற ஒரு சிறு நம்பிக்கைத் துளிர் நம்மிடையே வேர் விட்டு பரவ ஆரம்பித்திருந்தது. விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய நமது எண்ணங்களில் தெளிவு இருந்தது. நமது மக்கலின் வாழ்க்கைத் தரத்தை உயர்துவதற்கு மட்டுமே நாம் இந்த தொழில்நுட்பத்தை நாடுகிறோம் என்பதிலும், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் எண்ணத்தில் நமது பாதையை நாம் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதிலும் நாம் உறுதியாக இருந்தோம்.
அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகளின் இறுதியில் நாம் செயற்கைக் கோள் தொழிநுட்பத்திலும் அவற்றை விண்ணில் ஏவும் விண்செலுத்தி தொழிநுட்பத்திலும் தன்னிறைவு அடைந்தோம். தொலைத்தொடர்பு விஸ்த்தரிப்பு, இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற அத்யாவசியங்களை விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் கொண்டு வந்து நாம் மக்களின் அன்றாட வாழ்க்கை முன்னேற்றம் அடைந்ததைக் கண்டோம்.
இதன் தொடர்ச்சியாக நம்மிடையே ஒரு சிந்தனை தலை தூக்கியது.எழுபதுகளில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிலவை நோக்கி வத்திருந்த பார்வையை நாம் மேலும் கூர்மையாக்க இயலும் என்ற தன்னம்பிக்கை நம்மிடையே உருவானது. இதனை பனிப்போருக்காகவோ, பயன்பாடற்ற பகட்டுக்காவோ இன்றி மனித இனத்தின் முன்னோக்கிய நூற்றாண்டுகளை சற்றே தூக்கி நிறுத்தும் முயற்சியாகப் பார்த்தோம்.
அப்போது பிறந்தது சந்திரயான்-1 செயற்கைக் கோள் திட்டம்.
சோவியத் ரஷ்யா தந்து லூனா என்ற தானியங்கி எந்திர செயற்கைக் கோள்கள் மூலமும், அமெரிக்கா தனது அபொல்லோ விண்திட்டத்தின் மூலமும் நிலவின் பல பகுதிகளை ஆராய்ந்து பல முக்கிய முடிவுகளை வெளியிட்டிருந்தனர். நிலவின் கனிம வளங்கள், தரை அமைப்பு, தட்ப வெப்பம், மின்காந்த சூழ்நிலை போன்ற முக்கியமான இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்ந்து நிலவின் செழிப்பற்ற தன்மையையும் அதன் கடந்த காலத்தின் பிம்பங்களையும் காட்ட முயன்றனர். மனித கண்களுக்கு என்றுமே காட்சியளிக்காத நிலவின் மறுபக்கத்தையும் படம் பிடித்து நம் பார்வைக்குக் கொண்டு வந்தனர்.
அதுவரை பூமியின் தரையிலிருந்தே நிலவைப் பார்த்துப் பழகியிருந்த மனித சிந்தனைக்கு இவை பெரும் அறிவியல், தொழிநுட்ப புரட்சியாக அமைந்தது.
எனினும் இவை ஆரம்ப கால முயற்சிகள் என்பதால் முழுமை பெறவில்லை. நிலவில் தரையிறங்கிய இடங்கள் விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்களின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதி தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே நிலவின் அந்தப் பகுதிகள் மட்டுமே அறிவியல் தேடலில் ஓஎரளவு முழுமை பெற்றதாக இருந்தது. ந்லவின் மற்ற தரைப்பகுதிகள், அதிலும் குறிப்பாக வட மற்றும் தென் துருவப் பகுதிகள், பற்றிய ஆய்வு பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அத்துடன் , மிக முக்கியம்மக, நிலவில் நீர் உண்டா, இல்லை நீர் அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் எண்டா என்ற கேள்விக்கு இந்த ஆய்வுகள்லின் மூலம் திட்டவட்டமாக அறிய இயலவில்லை. நிலவில் உயிரினங்கள் தோன்றுவது அசாத்தியம் என்பதும், நீரும் காற்றும் பெரும்பாலும் இல்லாத காரணத்தால் மனித இனம் அங்கே சென்று உயிர் வாழ்வது மிகவும் கடினம் என்பதும் பரவலான கருத்தாக உருவானது.
எனவே நிலவப் பற்றி இதுவரை அறியப்பட்ட விவரங்களை அடிக்கோடாகக் கொண்டு நிலவின் முழு தரைமட்டத்தையும் ஆய்வு செய்து பல்வேறு தரப்பட்ட தகவல்கள் சேகரிப்பது என்பது சந்திரயான்-1 செயற்கை கோளின் செயல்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளாக உருவானது.
நிலவின் முழு தரைப் பரப்பையும் முப்பரிமாண புகைப்படம் எடுப்பது, கனிம மற்றும் வேதியியல் கூறுகளின் பரவல் தன்மையை ஆரைய்ந்து வரைபடம் உருவக்குவது, அதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் நிழ்ல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வது, நீர் உள்ளதா அல்லது நீர் அமையும் சாத்தியக்கூற்கள் உள்ளத என்பதை அறிவது, நிலவின் காந்த சக்தி மற்றும் அணுக்கதிரியக்கத் தன்மைகளைக் கண்டறிவது ஆகியவை சந்திரயான்-1 திட்டத்தின் செயல்முறை முடிவுகளாக அமைந்தன.
சந்திரயான்-1 செயல்திட்டம் பல அசாத்திய நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நம் நாட்டிலே உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்களில் வடிவமைக்கப்பட்ட ஐந்து அறிவியல் கருவிகளும் சந்திரயான்-1 செயற்கை கோளில் இடம் பெற்றன. அத்துடன் அதுவரை இல்லாத முறையில் உலகின் பல நாடுகளீல் இருந்தும் ஆய்வுக்கூடக் கருவிகளை சந்திரயான்-1 செயற்கை கோள் சுமந்து சென்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து 2 கருவிகள், ஐரோப்பவில் இருந்து 3 கருவிகள், பல்கேரியாவில் இருந்து ஒரு கருவி என ஆறு அறிவியல் நோக்கிலான அயல்நாட்டு கருவிகளுக்கு தாங்குமேடையாக சந்திரயான்-1 திகழ்ந்தது. ஐரோப்பிய கருவிகள் இரண்டில் நமது பணி சரிசமமாக இருந்தது. இந்தப் பதினோரு அறிவியல் கருவிகளூம் மேலே சொல்லப்பட்ட சந்திரயான்-1 செயல்திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்களை ஒன்றுக்கொன்று முரண்பாடற்ற வகையில் அதற்கு மாறாக ஒத்துப் போகும் தன்மைகள் உடையனவாக வடிவமைக்கப்பட்டு சந்திரயான்-1 செயற்கைக் கோளால் உயிரூட்டம் பெற்றன.
இந்தக் கருவிகள் மேலும் பல புதிய நிகழ்வுகளை நிலவின் அருகில் சென்று ஆராய்ந்து தகவல் சேகரிக்கும் தன்மைகளை உள்ளடக்கியனவாக வடிவமைக்கப்பட்டன. உதாரணமாக, ‘நிலவின் தரையில் மோதி உணரும் கருவியான தன்னகதே ஒரு நிழல்பட கருவியையும், உயரம் உணர் கருவியையும், ஒளிக்கதிர்களை பகிர்ந்து ஆராயும் பகுப்புமானியையும் உள்ளடக்கியிருந்தது. இதன்மூலம் சந்திரயான்-1 செயற்கைக் கோளை விட்டு நிலவை நோக்கி பாய்ந்து செல்கையில் நிலவின் துல்லியமான வாயு மண்டலத்தை கணிக்கவும்,எதிர்காலத்தில் சுமுகமாக நிலவில் தரையிறங்குவதற்குத் தேவையான செயல்முறைகள் மற்றும் அளவைகளையும் கண்டுணர்ந்து பூமிக்கு தகவல் கொடுக்கும் சிறப்பம்சங்களுடன் இந்தக் கருவி விளங்கியது. இதனைப் போன்றே பதினோறு கருவுகளும் ஒவ்வொரு புதிய ஆரய்ச்சியில் ஈடுபட்டு நிலவின் பல்வேறு தன்மைகளை கண்டுணர்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் 22, 2008 அன்று PSLV விண்செலுத்தி மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-1 செயற்கைக் கோள் நவம்பர் 8ந் தேதி நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது. ஏறக்குறைய மூன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டர் தொலைவான இந்த நெடிய பயணத்திற்கு என வடிவமைக்கப்பட்ட சந்திரயானின் LAM எனப்படும் திரவ எரிபொருள் கொண்ட தொலைதூர இயக்கத்திற்கு பயன்படும் எந்திரம் எந்தவித சிக்கலும் இன்றி செயல்பட்டது. விண்செலுத்தி மூலம் விண்ணில் ஏவப்படுவது, பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைவது, அதன் பின்னர் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து நிலவுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் உயரத்தில் நிலவினை சுற்றி வருவது ஆகிய முக்கியமான செயல்திட்டங்கள் நொடிபொழுது அளவும் கூட பிசகின்றி கச்சிதமாக செயல்படுத்தப்பட்டன.
சந்திரயான்-1 செயற்கைக் கோள் நிலவின் குறுகிய சுற்றுப் பாடதையை வெற்றிகரமாக அடைந்து சுற்றி வர ஆரம்பித்ததும், அதனில் பொருத்தப்பட்டிருந்த பதினோரு அறிவியல் நோக்கிலான கருவிகளும் வெற்றிகரமாகக இயக்கப்பட்டு அவை நிலவின் பல்வேறு தன்மைகளை ஆராய்ந்து பூமிக்கு தகவல்கள் தர ஆரம்பித்தன.
நிலவில் நீர் கண்டுபிடிப்பு: நீர் இன்றி அமையாது உலகு என்பது நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கு. நமது உலகில் உயிரினங்கள் தோன்ற முக்கியமான காரணிகளுள் நீர் பிரதானமாகும். ந்மது பூமியில் முதன்முதலில் தோன்றியவை கடல்வாழ் உயிரினங்களே என்பது உயிரியல் அறிவியலாளர்களின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவ்வாறு கடலில் தோன்றுவதற்கு காரணம் பூமி தோன்றிய ஆரம்பக் காலங்களில் பிராணவாயு பெருமளவில் கடல்நீரில் இருந்தனால் எனலாம்.
உயிர் அணுக்கள் வளர்வதற்கும் அவற்றினுள் நடைபெறும் பல்வேறு இயக்கங்கள் சரியான முறையில் இருக்கவும் தேவையான சக்தி பிராணவாயு மூலம் பெறப்படுகின்றது. இந்தப் பிராணவாயு உடல்பூரவும் சென்றடைய உதவுவது நமது இரத்த ஓட்டம். இரத்த ஓட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதது நீர் ஆகும். எனவே நமது சூரியக் குடும்பத்திலோ அல்லது அதற்கு அப்பாற்பட்ட வேறு கிரகங்களிலோ உயிர்வகைகள் இருக்குமாயின் அவை நீரைச் சார்ந்ததாகவே இருக்கும் என்பது நமது நம்பிக்கை.
பூமி தோன்றி சுமார் ஒரு பில்லியன் வருடங்களுக்குப் பிறகே முதல் உயிரணுக்கள் இங்கே தோன்றியிருக்கலாம் என்பது ஒரு முக்கியமான கணிப்பு. சூரியக் குடும்பத்தில் நமது பூமியைத்தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்வகைகள் இல்லை என்பது அறிவியல் வகையிலான நமது யூகம். சரியான மூலக்கூறுகள், சரியான சூழ்நிலை, சரியான தட்பவெப்பம், மூலக்கூறுகளின் சரியான கலவை அளவுகள் ஆகிய நான்கு முக்கியமான காரணிகளும் சேர்ந்து இந்த பூமியில் முதன்முதலாக உயிரணுக்கள் தோன்ற வழி வகுத்துள்ளன.
நிலவில் உயிரணுக்கள் உள்ளனவா, இல்லை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என நாம் அறிய முற்படுகையில் மேலே சொன்ன பூமியின் சரித்திரம் நமக்குக் கை கொடுக்கிறது. தற்போது உள்ள கால கட்டத்தில் நிலவு நாம் மேலே கண்ட நான்கு காரணிகளைக் கொண்டு ஏதோ ஒரு தோற்றத்தில் இருக்கலாம். சந்திரயானுக்கு முன்னே சென்ற செயற்கைக் கோள்கள் நிலவில் உயிரினங்கள் பெரும்பாலும் இல்லை என்ற கருத்தை நிலை நிறுத்தியுள்ளன. அப்படியானால் அங்கே குறைந்தபட்சம் நீர் உண்டா அல்லது நீர் அமையும் சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை அறிய வேண்டியது முக்கியமாகிறது. அப்படி இருக்குக் பட்சத்தில் ஒரு செல் உயிரணுக்கள் கொண்ட அமீபா போன்ற உயிரினங்கள் நிலவின் துருவ பிரதேசங்களில் தோன்றியிருக்கலாமோ என்ற வினா எழுகிறது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், என்பதே இன்றைய நிலையாக உள்ளது.
நிலவில் உயிரணுக்கள் தோன்ற அல்லது ஏற்கெனவே தோன்றியிருக்க வேண்டுமானால் அல்லது தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டுமானால் அதனை மறைமுகமாக அறிந்து கொள்வது சுலபமாக அமையும்.. காரணம் என்னவென்றால் நிலவில் உயிரினங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பதை நேரடியாகச் சென்றோ அல்லது தொலை-இயக்கி செயல்திட்டங்கள் மூலமோ ஆரய்வது ஒரு குறிப்பிட்ட அளவுக்கே சாத்தியமாகும். இதனையே அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் செய்துள்ளார்கள். ஆனால் நிலவின் முழுப் பகுதிகளையும் அவ்வாறு ஆராய வேண்டுமென்றால் அது மிக மிகக் கடினமானது மட்டுமன்றி இந்த காலகட்டத்திற்கு அவசியமற்றதும் கூட. மாறாக மறைமுக காரணிகள் இருப்பதையோ, இல்லாததையோ கண்டறிந்தோமானால் நமது கேள்விக்கு விடைகள் தாமக வரும், கடலில் இருக்கும் கப்பல்கள் கலங்கரை விளக்கம் இருந்தால் நிலப்பரப்பு அருகில் உள்ளது என்பதை உணர்வது போல.
இந்த முறையில் நிலவில் நீர் உள்ளதா அல்லது நீரின் மூலக்கூறுகள் உள்ளனவா அல்லது அவை அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று அறிந்தோமானால் அங்கே சிறிய உயிரினங்களேனும் உள்ளனவா, இல்லை தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற நமது கேள்விக்கு விடை கண்பது எளிது. இதனையே சந்திரயான்-1 செய்துள்ளது.
மேலே சொன்ன கேள்விகளுக்கு பதில் காணும் பொருட்டு சந்திரயான்-1’ல் பொருத்தப்பட்ட ‘நிலவின் கனிம வளம் காணும்’ (Moon Mineralogy Mapper) கருவி செயற்கைக் கோள் நிலவின் சுற்றுப்பதையை அடைந்தவுடன் மற்ற் கருவிகளைப்போல் நன்கு இயங்கத் தொடங்கியது. இது மின்காந்த அலைவரிசை தொகுப்பில் கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு அலைவரிசைகளிலும், இளஞ்சிவப்பு அலைவரிசைகளிலும் நிலவின் தரைமட்டத்தில் இருந்து பெறப்படும் உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட கதிர்களைக் கண்டறியும் திறன் வாய்ந்தது.
நிலவின் தரைமட்டத்தில் 1 முதல் 2 மில்லி மீட்டர் கனத்திலுள்ள மண்ணில் பரவிக்கிடக்கும் பிளேச்சியோகிளாஸ் மற்றும் பைராக்சின் எனப்படும் துகள்களினூடே சூரிய அலைக்கதிர்கள் பட்டுச் செல்லும்போது ஒளிக்கதிர்கள் உறிஞ்சுதல் ஏற்படுகின்றது. அதன்பின்னர் இந்தக் கதிர்கள் பட்டுத் தெறித்து பின்னோக்கி உமிழப்படும் போது அலைக்கதிர்களிடையே இந்த உறிஞ்சப்பட்ட கதிர்களின் விவரங்கள் அடங்கியிருக்கும்.
நிலவின் தரைமட்டத்தில் நீரோ அல்லது நீரின் மூலக்கூறுகளான ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய தனித்தியங்கும் அணுக்குழுமங்களோ இருக்கும் பட்சத்தில் சூரியனில் இருந்து வந்து நிலவில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்களில் அவற்றின் அத்தாட்சிகள் பதிந்திருக்கும். அதாவது இந்த அணுக்குழுமங்கள் சூரிய ஒளிக்கதிர்களில் உள்ள மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்களை உறிஞ்சிய பின்னர் மீதி இருக்கும் கதிர்களைத் தெறித்துவிடும். இப்படி பின்னோக்கி தெறிக்கப்பட்டு வரும் ஒளிக்கதிர்களை தகுந்த முறையில் சேகரித்து ஆராய்ந்து பார்த்தோமானால் உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட கதிர்கள் தொகுப்பிலிருந்து நிலவில் நீர் உண்டா இல்லை அதன் மூலக்கூறுகள் உண்டா என்பதை கணித்துவிடலாம்.
நிலவின் தரைமட்டம் முழுதுமாக சூரிய வெளிச்சத்தில் மூழ்குவது இல்லை. குறிப்பாக துருவப்பகுதிகளில் ஒளிக்கதிர்கள் சென்றடைவதில்லை. ஆகையால் சூரியக்கதிர்கள் நிலவில் படும் இடங்களில் நிலவின் கனிம வளம் காணும் கருவி மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலே கூறப்பட்ட உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்பட்ட ஒளிக்கதிர்களை சேகரித்து ஆராயும் முறை கையாளப்பட்டது.
கதிர் அலைவரிசை தொகுப்பில் மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்கள் உறிஞ்சப்படுதல் நிலவின் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் தொகுப்புகளில் காணப்பட்டது. இதிலிருந்து ஏறக்குறைய நிலவின் எல்லாப் பகுதிகளிலும் நீர் இருப்பதற்கு ஆதாரமான ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அது மட்டுமன்றி நீர் உருவாவதற்கான செயல்முறைகள் சிறிய அளவில் பரவலாக நிலவின் பரப்பில் ஏகமாக நடந்து கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த மூன்று மைக்ரோ மீட்டர் அலைவரிசையிலுள்ள கதிர்கள் உறிஞ்சப்படுதல் செய்கையானது சூரியக்கதிர்கள் நிலவின் தரைமட்டதில் விழும் கோணத்தைப் பொறுத்தது என்பதும், துருவப் பகுதிகளை நோக்கிச் செல்கையில் இது அதிகமாக உள்ளது என்பதும், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றது என்பதும் பெறப்பட்ட தகவல் திரட்டின் ஆய்விலிருந்து தெளிவாகி உள்ளது.
இவ்வாறாக நிலவின் தரைமட்டத்தில் இதுவரை நிலவின் கனிம வளம் காணும் கருவி ஆய்வு நடத்திய பெரும்பாலான பகுதிகளில் நீரின் மூலக்கூறுகள் வடிவில் நீரின் இருப்பு உள்ளது தெளிவாகியுள்ளது.
இந்த நூற்றாண்டில் இது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்பது அறிவியலாளர்களின் கணிப்பாகும்.
மேற்கண்ட கண்டுபிடிப்பை சந்திரயான்-1 செயற்கைக் கோள் சுமந்து சென்ற மற்றொரு கருவியான சிறிய செயற்கைப் பாவை கொண்ட வானொலி அலைக்கதிர் கண்டுணரும்’ கருவியும் (miniSAR) உறுதி செய்துள்ளது. இந்தக் கருவியானது வானொலி அலைகளை நிலவின் துருவப் பகுதிகளை நோக்கிச் செலுத்தி அவற்றை திரும்பப் பெற்று, அதனில்
ஏற்பட்டுள்ள முனைப்படு மாறுதல் (Polarisation) மூலம் அங்கே பனிக்கட்டிகள் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
முடிவுரை: இப்படியாக சந்திரயான்-1 செயற்கைக் கோள் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்துள்ளது. முதன் முறையாக மூன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டருக்கு மேலாக பயணம் செய்த முதல் இந்திய செயற்கைக் கோள் என்பதும், பதினோரு அறிவியல் கருவிகளை சுமந்து சென்று வெற்றிகரமாக அவற்றை இயக்கி பல அறிவியல் பயன்களைத் தந்துள்ளது என்பதும், பல வெளிநாட்டுக் கருவிகள ஏற்று நிலவுக்குச் சுமந்து சென்றதால் ஸ்ரவதேச பப்களிப்புக்கும் ஒற்றுமைக்கும் வழிவகுத்துள்ளது என்பதும், இதே வகையைச் சேர்ந்த அயல்நாட்டுச் செயற்கைக் கோள்களுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான தயாரிப்புச் செலவில் மொத்த திட்டமும் அடங்கியுள்ளது என்பதும் ஆகிய பெருமைகள் சந்திரயான்-1 செயற்கைக் கோள் மூலமாக நமது நாட்டிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள் என்றால் அது மிகையாகாது.



முனைவர் மயில்சாமி அண்ணாதுரை -
திட்ட இயக்குநர், சந்திரயான்-1&2.

கடல் பசிக்கு இரையான தமிழ் நிலங்கள்

யிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கடற்கரை. சில அளவு கோல்கள் 1076 கி.மீ. என்றும், சில 1206 என்றும் வேறுபட்டு நிற்கின்றன. சென்னை கடற்கரை மட்டும் 12 கிலோமீட்டருக்கு நீண்டிருக்கிறது. இவையெல்லாம் கடலுக்குள் அமிழ்ந்து போன தமிழக நிலப்பரப்பின் எஞ்சிய பகுதிகள். அலை கடலின் தாலாட்டில் பெருநிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது, பண்டைய தமிழகம்.

2004 டிசம்பர் 26-ஆம் நாள் நம்மில் சிலர் நேரடியாகவும் பலர் தொலைக்காட்சிகளிலும் கண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையை பழந்தமிழகம் பலமுறை கண்டிருக்கிறது. அத்தகைய ஆழிப்பேரலையில்தான் குமரிக்கண்டம் எனப் படும் லெமூரியா கண்டம் கடலடி சேர்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பி.டு.சீனிவாசய்யர், சேசைய்யர், ராமச்சந்திர தீட்சிதர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் உள்ளிட்டோரின் ஆய்வேடுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இணைத்த பெருநிலப்பரப்பே லெமூரியா என்றும், இச்சொல் குரங்கு மனிதர்களைக் குறிக்கும் என்றும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இங்குதான் முதன்முதலில் மொழி தோன்றி யிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர். அந்த மொழிதான் ஆதித்தமிழ் என்றும், மூவகைச் சுட்டொலிகளால் இந்த மொழி உருவானது என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழில் இன்றும் அ, இ, உ எனும் மூன்று சுட்டெழுத்துகள் நிலவுவதை இலக்கணத்தின் வாயிலாக அறிகிறோம்.

ஹிராட்டஸ், ஓல்டுகாம், எக்கேல், கிளேஷ்ஷர், கட்டு எலியட் ஆகியோரின் ஆய்வுகளும் கடல் கொண்ட குமரிக்கண்டத்தை விவரிக்கின்றன. இதன் மூலம் பழந்தமிழ் நிலப்பரப்பு என்பது தென்மேற்கில் கிரேக்கநாடு, மேற்கில் எகிப்து-ஆப்பிரிக்கா, வடமேற்கில் தென்னாப்பிரிக்கா, கிழக்கில் பர்மா-மலேசியா-சிங்கப்பூர், தெற்கில் நீண்ட மலைத்தொடர் எனத் தன் எல்லைகளைக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. இவை தொடர்பான ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியதென்றும், இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது என்றும், மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது என்றும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்-இடைச் சங்கங்களை வளர்த்த தென்மதுரையும், கபாடபுரமும் கடலுக்கு இரையானதால் தமிழின் தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. மருத்துவம், வானியல், கணிதம், அறநெறி என ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்களை கடல்தாய் தன்னகத்தே கைப்பற்றிக்கொள்ள, நிலத்தோடு சேர்த்து பல சிந்தனை வளங்களின் குவியலையும் இழந்தாள், தமிழ்த்தாய். இன்று தமிழர்களிடம் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் கடைச்சங்கம் அமைந்திருந்த இன்றைய மதுரையிலிருந்தும் சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களுமேயாகும் என்கின்றனர், புலவர் பெருமக்கள்.

அன்றைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள், காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார். சோழர்களின் ஆட்சிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந் நகரத்தைப் பற்றி சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணி மேகலை ஆகிய நூல்கள் விவரித்துக் கூறுகின்றன. பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்ட நகரத்தில் சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விளக்கும் பட்டினப்பாலை- அந்த எழிலை கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. கிரேக்கத் திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் வருகைதரும் வணிகர்களோடு கடல்வாணிபம் நடத்தும் சிறப்பைப் பெற்றிருந்திருக்கிறது அன்றைய பூம்புகார்.

நான்காம் கடற்கோளில் பூம்புகார் நகரத்தை கடல்கொண்டதை கிரகாம் குக் என்ற ஆய்வாளர் வீடியோ படமாகவே எடுத்திருக்கிறார். மொழி ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்பதை கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ படங்கள் நிரூபிக்கின்றன. மீனவர்களின் உதவியுடன் இந்திய நிலவியல் வல்லுநர்களால் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் இருப்பதும் மண் மற்றும் கல்லால் செய்யப்பட்ட கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர்கள், முற்றங்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், பெரிய குதிரைவடிவ பொம்மைகள் ஆகியவை படம் பிடிக்கப்பட்டுள்ளன என்று கிரகாம் குக் தெரிவிக்கிறார். கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வல்லுநர்களுக்கு கிரகாம் குக்கின் வீடியோ படம் புதிய அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத் திருக்கிறது.

தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகாரை மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை சிற்பி கணபதி ஸ்தபதியின் துணையுடன் அமைத்தார். பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. முதல்வர் கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது. அதேவேளையில், கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்து மேலும் பல கடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால்; மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.

கடல் கொண்ட நிலப்பகுதிகளால் தமிழகம் இழந்தவை ஏராளம்.

1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாளன்று வீசிய புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகால 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான வர்கள் பலியாயினர். சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்பவர்கள் தனுஷ்கோடி வரை போட்மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் செல்வது அன்றைய வழக்கம். அந்த போட்மெயில் எக்ஸ் பிரஸையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது, அந்த ஆழிப்பேரலை. கடல் கொண்ட தனுஷ்கோடியில் இன்று எஞ்சியிருப்பது, சிதிலமடைந்த ஒருதேவாலயமும் சிலகட்டிடங் களும் மட்டுமே.

புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கண்ட ஆழிப்பேரலையை அறிவோம். 26-12-2006-ல் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி, அந்தமான்-நிகோபர் தீவுகளின் இந்திரா முனை வழியாக தமிழகக் கடற்கரையைத் தாக்கிய அந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் 1000 கி.மீ. நீள கடலோரப்பகுதிகளில் பெரும்பாலானவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. ராமேஸ்வரம், திருச்செந்தூரைத் தவிர மற்ற கடலோரப் பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டன. பல மீனவ கிராமங்கள் மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகளற்றுப் போயின. தமிழகத்தின் கடல் எல்லைகள் இயற்கையின் கரங்களால் திருத்தியமைக்கப்பட்டன.

இப்படித் திருத்தியமைக்கப்படுவது நெடுங்கால மாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில பகுதிகள் கடலுக்குள் சென்றதுபோல, சில பகுதிகள் கடலிலிருந்து வெகுதூரம் சென்றிருப் பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னை கடற்கரையின் மணற்பகுதி கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்திருப்பதாக நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு கடலோரமாக இருந்த சீர்காழி தற்போது கடற்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளடங்கியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உரு வாக்கப்பட்ட மணல் திட்டுகளும், நேராகப் பாயும் பாலாற்றில் செங்கல்பட்டுக்கு அருகே காணப் படும் திடீர் வளைவும், கடலைச் சந்திக் காமல் திருவெண்ணைநல்லூர் அருகே புதையுறும் மலட்டாறும், வேதாரண்யத் திலிருந்து திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் மணல் திட்டுகளும், வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்களும் இங் கெல்லாம் ஒருகாலத்தில் கடல் இருந்தது என்பதைக் காட்டுவனவாக இருக்கின்றன என்கிறது, ஆய்வு முடிவு.

சுமார் 65ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் தாழ்ந்ததால் தமிழகமும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாகச் சேர்ந்திருந்தன என்றும், சுமார் 27ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும், தமிழகமும் பிரிந்தன என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 17ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இதேபோல கடல் மட்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் மாறுபாடுகளை உருவாக்கியதால் தமிழக-இலங்கை நிலப்பரப்பு சேர்ந்து-பிரிய வேண்டிய சூழல் மறுபடியும் ஏற்பட்டது, என்கின்றனர். இப்படி இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. இராமர் இலங்கைக்குச் செல்ல, அனுமன் கட்டிய பாலம் என்று சொல்லப் படுவது இந்த மணல் திட்டுகளைத்தான்.

புவி அமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா-க்ரீன்லாந்து-ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்தால், தாழ்வான கடற்கரையைக் கொண்டி ருக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல மூழ்கடிக்கப்படுமாம். இந்த எச்சரிக்கை, தமிழகத் தின் கடலோர வரைபடம்- இயற்கையின் கைகளால் மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு கடற்கோளும் மண்ணோடு சேர்த்து பண்பாட்டு-வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் தமிழகம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகிறது. இயற்கையைச் சிதைக்காமல் வாழும் கலையையும் கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியையும் கைக்கொண்டால், முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் காப்பாற்றலாம்.



----அ.காமராஜ்.

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!




உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது.இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...?

பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்?

அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?

இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை...?

உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை...?

நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்?

இதற்கான முதல் உதவிகள் யாவை...?

முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.

பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை...?

பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற...ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்...?

அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள். இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?

வைரமுத்து கவிதை

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் `கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அப்போது வைரமுத்து படித்த கவிதை:

''மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்

ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன

நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர். இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்

உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது

எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.

நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்

வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.

மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?

செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

இவ்வாறு கவிதை பாடினார் வைரமுத்து.

Friday, June 18, 2010

வரலாற்றுச் சுவடுகள் ---ஈழப் போராட்டம்



தமிழீழம் சிவக்கிறது - பழ. நெடுமாறன்

தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார்.

அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர்.

இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள்..

1989ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரையுள்ள மூன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நிகழ்ச்சி ஆகும். அதுபற்றிய பதிவே இந்த பகுதியாகும்.

தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகøளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது. அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது.

1919ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியான்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொது மக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் ‘சுட்டேன், சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்' என்று கொக்கரித்தான்.

ஜாலியான் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணும் வல்வெட்டித் துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.

இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச் செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன.

ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாள்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் ‘பெர்னாண்டஸியல் டைம்ஸ்' பத்திரிகையின் நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17ம் நாளன்று அவரது பத்திரிகைகளில் இச் செய்தி வெளிவந்தது. பரபரப்பாக வெளி வந்த பிறகு செப்டம்பர் 3ம் நாள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' சிறிய அளவில் இச் செய்தியை வெளியிட்டது.

இந்த முறை வல்வெட்டித் துறைக்கு நான் சென்ற போது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முயற்சி செய்தேன். வல்லவை மக்கள் குழுவின்

தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடன சிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லவ மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.

1989ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள் வல்வெட்டித் துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித் துறையைச் சுற்றி இருந்த மூன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுற்றுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன் வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப் போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டனர். கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும் பெற்றோர் உடலைப் பிள்ளைகளும் பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.

மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. சில கடைகளில் அவற்றின் முதலாளிகளையும் உயிருடன் உள்ளே தள்ளி எரித்தார்கள். மொத்தமாக 62 போக்குவரத்து வாகனங்கள் எரிக்கப்பட்டன. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரி கேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின் வருமாறு கொக்கரித்தாராம்.

‘இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நூற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகில் 4வது பெரிய இராணுவம்'.

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லவை நகரம் சுடுகாடானது.

வல்வெட்டித் துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் மேலும் பரவிக் கொணடே இருந்தது. இராணுவத்தினர் போய் விட்டதாக நினைத்து அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

வல்லவை மக்கள் குழுவின் செயலாளர் ஆனந்தராஜாவும், அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஒத்துழைத்தார். அப்போது உடுப்பிட்டியில் இருந்து இந்திய இராணுவச் சிப்பாய்கள் 30 பேர் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆனந்த ராஜாவை அவர்கள் பார்த்து விட்டார்கள். அவர் ஓடுவதற்கு முயற்சி செய்யவில்லை. ஏற்கனவே தன்னை இராணுவத்தினர் அறிவார்கள் என்பதால் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அருகில் வந்து ஒரு சிப்பாய் அவரைப் பலமாகத் தாக்கினான். அவருடன் சேர்ந்து மேலும் 8 பேரைப் பிடித்துக் கைதிகளாகத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள்.

அப்போது கேப்டன் பர்க் என்னும் இந்திய அதிகாரி அங்கு வந்தார். அவர் ஏற்கனவே ஆனந்தராஜாவிற்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரிடம் ஏதோ முறையிடுவதற்காக ஆனந்தராஜா முயன்ற போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவர் மார்புக்கு நோக்கி தூக்கிப் பிடித்தார். ஆனந்தராஜ் பாடசாலை ஒன்றின் முதல்வர். மக்கள் குழுவின் செயலாளர். இந்திய இராணுவத்திற்கு மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டவர். ஒரு முறை பருத்தித்துறை இந்திய இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவனைப் புலிகள் கைது செய்து கொண்டு போய் விட்டார்கள்.

அவரை மீட்பதற்கு வடமராட்சி மழுவதும் இராணுவத்தினர் சல்லடை போட்டு தேடினார்கள். ஆனாலும், அவர்களால் சிப்பாயை மீட்க முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அதிகாரி, ஆனந்தராஜாவிடம் மன்றாடினார். புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளரான தீபன் என்பவருடன் தொடர்பு கொண்டு அந்தச் சிப்பாயை விடுவிக்கச் செய்து இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஆனந்தராஜாவும் மக்களும் ஒப்படைத்தார்கள்.

இப்படியெல்லாம் செய்த ஆனந்தராஜாவையே அவர்கள் துச்சமாக மதித்தார்கள். ஆனந்தராஜாவையும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் அழைத்துச் சென்று உடுப்பிட்டி இராணுவ முகாமில் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். முகாமின் வாசலில் 67 சீக்கியர்கள் உருளைக் கட்டைகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக அடித்து நொறுக்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். தனக்கும் இந்த கதி தான் என்பதை உணர்ந்த ஆனந்தராஜா அந்தக் கொடுமையைத் தாங்குவதற்கு தயாரானார். அப்போது கேப்டன் மேனன் என்ற ஓர் அதிகாரி அவரிடம் ஓடி வந்தார்.

‘மிஸ்டர் ஆனந்தராஜா உங்கள் புலிகள் எங்களுடைய சிப்பாய்கள் 9 பேரைக் கொன்று விட்டார்கள். நாங்கள் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறோம். உங்களையும் உங்கள் ஊரையும் என்ன செய்கிறோம் பார்' என்ற ஆத்திரத்துடன் கத்தினார். பிறகு அவருடைய கழுத்தில் கையை வைத்து உள்ளே தள்ளினார். அங்கே நான்கு சீக்கிய சிப்பாய்கள் ஆனந்தராஜாவைச் சுற்றிக் கொண்டு உருளைக் கட்டைகளால் மாறி மாறித் தாக்கினார்கள்.

அவர் தலையில் இருந்து குருதி ஓடியது. முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த அவர் தொண்டையின் மீது ஒரு மரக்கட்டையை வைத்து சீக்கிய சிப்பாய் ஒருவன் அதன் மீது நின்றான். தான் இறக்கப் போவதை உணர்ந்து விட்ட நேரத்தில் அவர் அவனைப் பிடித்துத் தள்ளியதும் ஆத்திரம் கொண்ட அந்தச் சிப்பாய் அவர் முகத்தில் மாறி மாறி மிதித்தான். அவர் மூச்சுத் திணறி மயங்கி விட்டார். அவர் இறந்து விட்டதாகக் கருதி அந்த வெறியர்கள் விலகிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுவ டாக்டர்.கேப்டன் சௌத்ரி ஆனந்தராஜாவை ஏற்கனவே அறிந்தவர். அதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றினார்.

மறுநாள் காலை மருத்துவமனையில் படுத்திருந்த ஆனந்தராஜாவை டாக்டர்.கேப்டன் சௌத்ரி ‘உடல் நிலை விசாரிப்பது போல்' வந்தார். தலையிலே பட்ட காயத்திற்கு மருந்து போடப்பட்டு இருந்தது. முகம் வீங்கி இருந்தது. வலது கன்னத்தில் ஆழமான காயம் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்திருந்தார். டாக்டருடன் வந்த கேப்டன் கர்பத்சிங் என்னும் சீக்கியன் அவரின் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிமிர்த்தினான். பின்பு இந்தியில் ஏதோ திட்டினான். ‘மிஸ்டர் ஆனந்தராஜா, நேற்று வல்வெட்டித் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மிகக் கொடூரமானவை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். தமது இராணுவ வீரர்கள் இறந்ததைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

‘போரில் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்; ஆனால், போரில் எந்தச் சம்பந்தமும் இல்லாத பொது மக்களிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித் தனமானது, கொடூரமானது' என ஆனந்தராஜா பதில் கூறினார். அதைக் கேட்ட டாக்டரின் முகம் கோபத்தினால் சிவந்தது.

‘அப்படியா, அது இருக்கட்டும், எங்களுக்கு வல்வெட்டித் துறைப் பிரமுகர் ஒருவரைக் கொன்று விடும்படி இந்தியாவிலிருந்து ஆணை வந்துள்ளது. உங்களுடைய பெயரை அறிவித்து விட்டோம். இன்று 9.45 மணிக்கு வலி எதுவும் இல்லாமல் உங்களைக் கொல்லப் போகிறோம். நீங்கள் அதற்கு முன்னால் உங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டிக் கொள்ளலாம்' என மிரட்டினார்.

இந்திய இராணுவ டாக்டருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா ஆச்சரியப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாகத் தமது மக்களிடம் இந்திய இராணுவத்தினர் எல்லாவற்றையும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்தவர். ஆதலால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், டாக்டரோ மேலும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

‘புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடத்தை நீங்கள் காட்டிக் கொடுத்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றும் படி மேலதிகாரிகளுக்கு நான் சிபாரிசு செய்வேன். நீங்களும், குடும்பஸ்தர், பள்ளியின் முதல்வராக இருப்பவர். எதற்காக வீணாக உயிரை இழக்கவேண்டும்' என்றார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தராஜா அந்த வேதனையின் நடுவிலும் சிரித்துக் கொண்டே, ‘டாக்டர் நான் கடவுளைப் பிரார்த்திக்கப் போகிறேன்' இவ்வாறு கூறியதும் டாக்டர் சௌத்ரி வேகமாக விலகிச் சென்றார்.

பின்பு பிரிகேடியர் முன்பு ஆனந்தராஜா ஆஜர்படுத்தப்பட்டார். ‘மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாடுதானா உங்கள் நாடு? சே! என்னால் நம்பவே முடியவில்லை. என்று வேதனையோடு ஆனந்தராஜா கூறிய போது அந்தப் பிரிகேடியர் பின்வரும் பதிலைச் சொன்னார்.

‘மிஸ்டர் ஆனந்தராஜா, வெரி சாரி, உங்களைத தற்செயலாகத் தான் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மனம் வருந்துகிறேன். உங்களுடைய சொல்லைப் புலிகள் கேட்க மாட்டார்கள். எப்படியாவது அவர்களை நாங்கள் அழித்து விடுவோம். அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். புலிகள் ஒளிந்திருக்கும் இடங்களை நீங்கள் கூறினால் உங்களைப் பத்திரமாக இந்தியாவுக்கே அனுப்பி அங்கே நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் முகத்தை மறைத்து முகமூடி போட்டு அழைத்துச் செல்கிறோம். எங்களுடைய ஜீப்பில் வந்தே புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கலாம்' என்றார்.

பிரிகேடியரின் இந்தக் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா எரிச்சலுடன் பதில் கூறினார்.

‘அத்தகைய துரோகத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன். புலிகளை அழிக்க நினைப்பதை மறந்து விட்டு அவர்களுடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது. அதை விட்டுவிட்டுச் சிறு பையன்களிடம் கூறுவது போல என்னிடம் கூறாதீர்கள்' என்று கூறிவிட்டு அவர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

பிரிகேடியர் அருகே நின்ற கர்னல் சர்மா ‘நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் உம்மைக் காங்கேயன் துறைமுகத்துக்கு அனுப்பிவிடுவோம்' என்று மிரட்டினார்.

புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சித்திரவதை முகாமான காங்கேயன் துறை முகாமுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு 750 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் 150 பேரை அடைத்து வைப்பார்கள். ஒரே ஒரு மலக்கூடத்தைத் தான் அத்தனை பேரும் பயன்படுத்த முடியும். சாப்பாடு ஒழுங்காக அளிக்கப்படுவது இல்லை. கைதி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். ஆனால், கைதிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொள்வார்களே தவிர பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இராணுவ அதிகாரிகளே அவற்றை எடுத்துக் கொள்வார்கள். யாராவது தப்பித் தவறி இதைத் தட்டிக் கேட்டால் அன்று முழுவதும் அவருக்கு அடியும் உதையும் தான் கிடைக்கும்.

முன்பொருநாள் காங்கேயன் துறை முகாமுக்கு அங்குள்ள கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளைக் கேட்டு ஏதாவது உதவி செய்வதற்காகச் சென்ற மக்கள் குழுவில் ஆனந்தராஜாவும் ஒருவராக இருந்தார். அந்தக் கொடுமையான முகாம் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும். அதனால் தான் அவரை அந்த முகாமுக்கு அனுப்ப போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள்.

‘அந்த முகாமுக்கு அனுப்புவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றால் கூட நீங்கள் கூறும் கீழ்த்தரமான வேலைகளை நான் செய்யப் போவது இல்லை' என ஆனந்தராஜா பதில் கூறினார்.

ஒரு மரண வீட்டில் துக்கம் கொண்டாடுவதற்காக உறவினர்கள் வந்து கூடியிருந்தார்கள். திடீர் என அந்த வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடு இல்லாமல் வெளியே இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். நீங்கள் எல்லோரும் புலிகள், உங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வெறி பிடித்தவன் போல ஒரு சிப்பாய் கத்தினான். துக்க வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடி வந்து சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள்.

ஆனால் அந்த மூர்க்கர்களின் மனம் இரவில்லை. ஆண்களையெல்லாம் அடித்து இழுத்துக் கொண்டு முச்சந்தியை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் ஓடி வந்த பெண்களை ‘பூட்ஸ்' கால்களினால் உதைத்தும், துப்பாக்கிக் கட்டைகளினால் அடித்தும் விரட்டினார்கள். வல்வெட்டித் துறைச் சந்திப்பை அடைந்ததும் அவர்களை ஒரு சாலையில் உட்கார வைத்தார்கள். முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப் போய் அங்கேயே கிடந்தன. சிலருடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எதிர்ப்புறமாக எரிந்த கடை ஒன்றில் முன்னாள் நிற்க வைத்தார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்றஅச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. அங்கே நின்ற மற்றொரு சிப்பாய் அவ்வாறு நிறுத்தப்பட்ட ஆறு பேரையும் சுட்டுத் தள்ளினான். அந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே அவர்களுடைய உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க துடிதுடித்து இறந்தார்கள்.

வல்வெட்டித் துறைப் பிள்ளையார் கோயில் ஊரிலிருந்து சிறிது ஒதுக்குப்புறத்தில் அமைந்து இருக்கிறது. பொதுவாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்கள் அங்கே ஓடி அடைக்கலம் புகுவார்கள். அன்றும் ஏறக்குறைய 400 பேர் வரையில் அந்த ஆலயத்திற்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களையும் இந்திய ராணுவம் விட்டு வைக்கவில்லை.

கோவில் என்றும் பார்க்காமல் ‘பூட்ஸ்' கால்களோடு வெறித்தனமாகப் பாய்ந்து ஓடி வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்களின் கண்களுக்கு முதலில் பட்டவர்கள் கோயில் அர்ச்சகர்கள் தாம். அந்த இரண்டு அர்ச்சகர்களையும் கோவிலுக்குள் வைத்தே பலமாகத் தாக்கினார்கள். பிறகு அங்கே இளைஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து அடித்து வெளியே சந்திக்குக் கொண்டு வந்தார்கள். மேலும் மற்றப் பகுதிகளில் பிடிப்பட்டவர்களையும் அங்கே கூட்டி வந்தார்கள். கொதிக்கும் வெயிலில் அங்கிருந்து உருண்டு கொண்டே உடுப்பிட்டியில் இருந்த இந்திய இராணுவ முகாம் நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்கள். கொதிக்கும் தார்ச்சாலையின் சூட்டைப் பொறுக்க முடியாமல் வேதனையுடன் உருண்டு உருண்டு சென்று கொண்டிருந்த மக்களை மரக்கட்டைகளால் அடித்துக் கொண்டே சென்றார்கள்.

(மூன்று நாட்களும் வல்வெட்டித்துறையில் நடந்த சம்பவங்கள் இதுவரை எங்கும் நடைபெறாதவை. வல்வெட்டித்துறையில் நடந்த சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் திட்டமிட்டு மறைத்தன. அந்நியநாட்டைச் சேர்ந்த ஊடகங்கள்தான் அம்பலப்படுத்தின. சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசியா வாட்ச் போன்ற உலக மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விசாரணை நடத்தி இந்திய ராணுவத்தை கண்டனம் செய்தனர். தமிழர்கள் என்றும் மறக்க முடியாத நிகழ்வு இது.)

‘தம்பி’ வீட்டில் இந்தியப்படை

1985ம் ஆண்டு, அக்டோபரில் வல்வெட்டித் துறையில் உள்ள தம்பி பிரபாகரன் அவர்களுடைய வீட்டிற்கு நான் சென்று பார்த்த பொழுது வீட்டின் கூரை மட்டுமே நாசமாகிக் கிடந்தது. சுவர்கள் சேதமடையாமல் நின்றன. சிங்கள இராணுவம் அதற்கு மேல் நாசப்படுத்தவில்லை. ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பின் 1990ம் ஆண்டு, மாரச் மாதம் அதே வீட்டைச் சென்று பார்த்த போது சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடியோடு நாசமாகிக் கிடந்தன.

பிரபாகரனைப் பிடிக்க முடியாத இந்திய ராணுவம் பீரங்கியால் சுட்டு அவரின் வீட்டை நாசப்படுத்தியது. பிரபாகரனைச் சுட முடியாத ஆத்திரத்தை அவரது வீட்டைச் சுட்டுத் தீர்த்துக் கொண்டது.

ஆனாலும், இந்தியப் படை வீரர்கள் பிரபாகரன் மீது எத்தகைய மதிப்பு வைத்திருந்தார்கள் என்பது பின்னால் வெளியாயிற்று.

இந்தியப்படை வீரர்கள் தம் நாட்டிற்குத் திரும்பும் சமயத்தில் அணி, அணியாக அந்த வீட்டிற்கு வந்து அதன் முன் நின்று ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த வினோதக் காட்சியை வல்வெட்டித் துறை மக்கள் வேடிக்கையாகப் பார்த்து ரசித்தனர்.

- பழ.நெடுமாறன்

டமிழன்

'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு' - நாமக்கல் கவிஞரது பெருமை கலந்த வாக்கியம் இது. தாய் மொழியைத் தள்ளிவைப்பதுதான் அந்தக் குணமா?
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இருக்கும் கரூர்த் தமிழன் பிரேம் ஆனந்த். பெரும்பாலான மாதங்கள் விமானங்களில் வாழும் தொழிலதிபர். அவர் என்னைத் தொடர்புகொண்டு இப்படிச் சொன்னார்...
"சென்னை விமான நிலையத்தில் தமிழில் ஏதாவது கேட்டால், அந்த இடத்துக்குள் இருக்கக் கூடாத ஜந்து ஒன்று உள்ளே நுழைந்துவிட்ட அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். நட்சத்திர விடுதிக்குள் போனால், வரவேற்பாளர் ஆங்கிலத்தில்தான் விசாரிக்கிறார். செலுத்த வேண்டிய தொகைக்கான அட்டைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. சாப்பிட உணவு விடுதிக்குப் போனால், எல்லாமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. தவறான ஆங்கிலத்தில் பேசினால்கிடைக்கும் மரியாதைகூட, சரியான தமிழில் பேசுபவருக்குக் கிடையாது. தமிழில் ஏதாவது கேட்டால், அதற்கு ஆங்கிலத்தில்தான் பதில் தருகிறார்கள். என்னுடைய தொழில் தொடர்பாகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் அலையும் எனக்கு, இது இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அவரவர் தாய் மொழி தெரிந்தவர்கள், பேசுபவர்கள் நிச்சயம் இருப்பார்கள். நம் நாட்டில் இருந்து அதிகமான ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதால், சில ஜெர்மன் விமான நிலையங்களில் தமிழ் ஆள் ஒருவர் இருக்கிறார். நாம் தமிழில் என்ன ஆலோசனைகள் கேட்டாலும், தயங்காமல் சொல் கிறார். ஆனால், இங்கோ எல்லாமே ஆங்கிலமயமாகி வருகிறது. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதில், தமிழர்கள் யாரும் தயங்கக் கூடாது. ஆனால், ஆங்கிலத்துக்குத் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைப்பது சரியானதா?" என்று அவர் சொல்லச் சொல்ல, உள்ளக் கொதிப்பு அதிகமானது.

"எத்தனையோ மாதங்கள் வெளிநாட்டில் அலைந்து திரிந்து ஆங்கிலத்தில் மிதந்து வந்த நான், தாய்த் திருநாட்டில் அழகு தமிழில் பேசப்போகும் மகிழ்ச்சியில் வந்து இறங்கினால், இந்த ஊர் நாளுக்கு நாள் ஆங்கில மோகத்தில் அடிமையாகிக்கொண்டே போகிறதே!" என்று வருத்தப்பட்டார்.

இதைத்தான் கவிஞர் காசி ஆனந்தன் பல ஆண்டுகளுக்கு முன்னால்,
'தமிழா, நீ பேசுவது தமிழா' என்று கவிதையாகக் கேள்வி கேட்டார்.
நம்முடைய தாய் மொழியை அநாதையாகத் தள்ளிவிட்டோம். தமிழ் படிச்சா என்னங்க கிடைக்கும்... ஒப்புக்கு ஒரு வேலையும் கிடைக்காது. மரியாதையாச் சொல்லிக்கிற மாதிரி சம்பளமும் கிடைக்காது... 'இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் சார் நான், எனக்கு எதுக்கு தமிழ்? அதெல்லாம் பொலிட்டீஷியன்ஸ் பேசுவாங்க. எங்க அப்பா பேசுற தமிழ் எனக்குப் புரியுற அளவுக்கு நாலெட்ஜ் இருந்தாப் போதாதா?' என்பதே இன்றைய இளைஞர்களின் பதிலாக இருக்கிறது. தமிழ், இன்றைய தலைமுறைக்கு அவசியமான ஒன்று என்பதை உணர்த்தத் தவறியது குற்றமா... அல்லது,தாய்மொழியைப் படிப்பது கேவலம் என்று கருதும் இவர்களின் நினைப்பு குற்றமா?

சார், யெஸ், நோ, மேடம், மிஸ், ப்ளீஸ், ஸாரி, டிராஃபிக், ஹாட், கூல், ஃபோர், டாடி, மம்மி, குட்மானிங், குட் நைட், வெரிகுட், தேங்க்ஸ், பாய்ஸ்,கேர்ள்ஸ், ஸ்மார்ட், ஹாபி, ஓல்டு மேன், வாட்டர், ரெஸ்ட், லேட், ஹேப்பி, அங்கிள், ஆன்ட்டி போன்ற பல வார்த்தைகள் கலக்காமல், யாரா லும் பேச இயலவில்லை. "நாங் கள் கன்னித் தமிழ் பேசினோம். ஆனால், இன்றைய இளைஞர்கள் கட் பண்ணி, மீட் பண்ணி... என்று பண்ணித் தமிழ் பேசுகிறார்கள்" என்று கிண்டல் அடித் தார் அப்துல் ரகுமான். தமிழ் தெரிந்த, பேசும் இளைஞர்களுக் குக்கூட சரியான உச்சரிப்பு வர வில்லை. நுனி நாக்கில் தமிழ் பேசி... நளினத்தைத் தேவையில்லாமல் குழைத்து... 'டமிழ்' தடுமாறுகிறது.

"இன்றைய இளைஞர்களுக்குத் தமிழ் ஆர்வம் இல்லாமல் போனதற்குக் காரணம், தமிழை முன்நிறுத்தி மக்களை ஈர்க்க வேண்டிய இயக்கங்கள் இல்லாததும், அப்படி ஈர்க்கக்கூடிய இயக்கங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதும்தான்" என்கிறார் பேராசிரியர் கல்யாணி. "நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் அப்படிப்பட்ட இயக்கங்கள் இந்த நாட்டில் இருந்தன. அவர்களை நாங்கள் நம்பினோம். அரசியல் ஆர்வமானது எங்களுக்குத் தமிழ் ஆர்வத்தையும் விதைத்தது. அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் மாணவர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், இன்று அப்படி இல்லை. தமிழைச் சொல்லி வளர்ந்த தலைவர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, எங்களுக்கு இரு மொழிக் கல்வியைத்தான் தீர்வா கக் காட்டினார்கள். தமிழ்நாட்டுக்கு தமிழ், அகில இந்தியத் தொடர்புக்கு ஆங்கிலம் என்று சொல்லிக்கொடுத்தார்கள். அதாவது, இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது. இங்குள்ள மாநில ஆட்சியை முழுமையாகத் தமிழ்மயப்படுத்தத் தவறினார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வியையே வலியுறுத்தினார்கள். இது ஆங்கிலத்தை முழுமையாக, தவிர்க்க முடியாத சக்தியாக இன்றுகொண்டுவந்து இருத்திவிட்டது" என்கிறார் கல்யாணி.

குழந்தைகள் உரிமைக்கான முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தேவநேயன், "நம்முடைய அடிமனத்தில் இருக்கும் கற்பிதங்கள்தான் இதற்குக் காரணம். வெள்ளை நிறம் மேன்மையானது, வெள்ளைதான் அழகு, வெள்ளைக்காரன்தான் சிறந்தவன், அவன் பேசும் மொழி உயர்வானது என்றுநினைக்கிறார்கள். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்த பிள்ளைக்குச் சொந்தமாக ஆங்கிலக் கட்டுரை எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பிள்ளைகள் வகுப்பறைகளில் ஆசிரியர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலம் 26 எழுத்துதான், தமிழில் 247 எழுத்து என்று சிலர் சலித்துக்கொள்கிறார்கள். ஆனால், 5 ஆயிரம் எழுத்துகொண்ட ஜப்பானிய மொழியைத்தான் அந்நாட்டவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். எங்கும் கன்னட மொழிதான் என்று கர்நாடக மாநிலம் மாறிவிட்டது. மிகப் பெரிய செல்போன் நிறுவனம் தனது விளம்பரங் களை அங்கே, கன்னடத்திலும் இங்கு ஆங்கிலத்திலும் எழுது கிறது.

நிலவுக்கு விண்கலத்தைஅனுப்பியபோது, ஒருவேளை அங்கு மனிதன் இருந்தால் என்ன மொழியைப் பேசுவான் என்பதை ஆராய்ந்து 14 மொழிகளைக் கணக்கிட்டார்கள். அதில் ஒன்று, தமிழ். நிலவில் ஒருவேளை மனிதன் இருந்தால், தமிழ் பேசுகிறவனாகக்கூட இருப்பான் என்று நினைத்தார்கள். ஆனால், நிலத்தில் தமிழே பேச வராத தலைமுறை உருவாகி வருகிறதே" என்கிறார் தேவநேயன்.

காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். தமிழ்ப் பற்றாளர்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்... 'தங்களது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொள்வோம், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை வைப்போம், தமிழில் கையெழுத்துப் போடுவோம்,பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழில் இருக்கட்டும், கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யுங்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளைத் தமிழில் நடத்துங்கள், ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழில் பேசுங்கள், தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தமிழில் மட்டுமே பேசுங்கள்.'


வெல்க தமிழ்!

நன்றி-விகடன்

Wednesday, June 16, 2010

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்




1948 திசெம்பர் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது.
அப் பிரகடனம் மேல்வரும் பக்கங்களில் முற்றுமுழுதாகத் தரப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நடவடிக்கையின் பின்னர் சபையானது பிரகடனத்தை வெளியிடுமாறும் அவ்வாறு வெளியிடப் பெற்றதை "நாடுகள் அல்லது ஆள்பலங்கனின் அரசியல் அந்தஸ்துக் காரணமாக எவ்வித வேறுபாடுமில்லாவகையில் எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும் காட்சிக்கு வைக்கவும் வாசிக்கச் செய்யவும் விளக்கவும" செயற்படுமாறு அங்கத்துவ நாடுகள் யாவற்றையும் கேட்டுக் கொண்டது.

மனிதக் குடுப்பதினைச் சேர்ந்த சகலரிவதும் உள்ளார்ந்த கௌரவத்iதையும் அவர்கள் யாவரதும் சமமான பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாலும்

மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றை அவமதித்தலும் மனுக்குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாலும் பேச்சுச் சுதந்திரம் நம்பிக்கைச் சுதந்திரம் அச்சத்திலிருந்தம் வருமையிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை மனிதன் பூரணமாக துயக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்கின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாலும்

கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும் எதிரான இறுதி வழியாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க வேண்டுமேல் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாப்பப்படுவது அத்தியாவசமாகவுள்ளதாலும் நாடுகளிடையே நட்புறவுகள் ஏற்படுத்தப்படுவதனை மேம்படுத்துவது அத்தியாவசியமாகவுள்ளதாலும்

ஐக்கிய நாடுகள் சபையிற் கூடிய சகல மக்களும் பட்டயத்தில் அடிப்படை மனித உரிமைமகள் பற்றிய நமது நம்பிக்கையை ஒவ்வொரு மனிதப் பிறவினதும் கௌரவம் பெறுமதியை ஆண் பெண்ணின் சம உரிமையை மீளவலியுறுத்தி அதிசுதந்திரச் சூழலில் சமூக முன்னேற்றம் உயர்ந்த வாழ்க்கைத் தரமாதியவற்றை மேம்படுத்தத் துணிந்துள்ளாராதலாலும்

மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பையும் அனுட்டானத்தையும் மேம்படுத்தலை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டுறவுடன் முற்று முழுதாகச் செயல் படுத்த அங்கத்துவ நாடுகள் சூளுறுதி கொண்டுள்ளனவாதலாலும்

இச் சூளுறுதியைப் பரிபூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் பற்றிய பொது விளக்கமிருத்தல் முக்கியமுடையதாதலாலும் இப்பொழுது: பொதுச் சபை பிரகடனப்படுத்துவதாவது

சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு சாதனமும் இப்பட்டயத்தை இடையறாது மனத்திலிருத்தி இவ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதி்ப்பினை மேம்படுத்துதற்குக் கற்பித்தல் மூலமும் கல்வி மூலமும் தேசிய சர்வதேசிய நிலைப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் முயலும் நோக்கிற்காகவும் அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் மக்களிடையேயும் அத்துடன் தங்கள் நியாயாதி்க்கத்தின் கீழ் வரும் ஆள்புலத்து மக்களிடையேயும் இவ்வுரிமைகள் சுதந்திரங்கள் முழு மொத்தமாக வலிவும் பயனுறிதிப்பாடுமுடைய முறையில் ஏற்கப்பட்டு அனுட்டிக்கப்படுவதை நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படத்தக்க சகல மக்களும் நாட்டினங்களும் தத்தமது சாதனையிலக்கின் பொது அளவாகக் கொள்ளத்தக்க இந்த மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தைப் பொதுச் சபையானது எடுத்துச் சாத்துகின்றது.

உறுப்புரை 1

மனிதப் பிறிவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர் அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள் அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.

உறுப்புரை 2

இனம் நிறம் பால் மொழி மதம் அரசியல் அல்லத வேறு அபிப்பிராயமடைமை தேசிய அல்லத சமூகத் தோற்றம் ஆகனம் பிறப்பு அல்லத பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர்.

மேலும் எவரும் அவருக்குரித்துள்ள நாட் டின் அல்லது ஆள்புலத்தின் அரசியல் நியாயாதிக்க அல்லது நாட் டிடை அந்தஸ்தின் அடிப்படையில் அது தனியாட்சி நாடாக நம்பிக்கைப் பொறுப்பு நாடாக தன்னாட்சியற்ற நாடாக அல்லது இறைமை வேறேதேனும் வகையில் மட்டப்படுத்தப்பட்ட நாடாக இருப்பினுஞ்சரி - வேறுபாடெதுவும் காட்டப்படலாகாது.

உறுப்புரை 3

வாழ்வதற்கும் சுதந்திரத்தையுடையதாயிருத்த தற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமையுடையோராவர்.

உறுப்புரை 4

எவரும் அடிமையாக வைத்திருக்கபடுதலோ அல்லது அடிமைப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுதலோ ஆகாது அடிமை நிலையும் அடிமை வியாபாரமும் அவற்றில் எல்லா வகையிலும் தடை செய்தல் வேண்டம்.

உறுப்புரை 5

எவரும் சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான மனிதத் தன்மையற்ற அல்லத இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ மட்டப்படுத்தலாகாது.

உறுப்புரை 6

ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் ஆளாக ஏற்றுக்கொளெளப்படுவதற்கு உரிமையுடையவராவர்.

உறுப்புரை 7

எல்லோரும் சட்டதின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பராபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பராபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8

அவ்வந் நாட்டின் அரசியலமைப்பினால் அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காத் தகுதிவாய்ந்த தேசிய நியாய சபைகளினும் வழங்கப்படும் பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு உரிமையுடையவர்கள்.

உறுப்புரை 9

ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது செய்யப்படுதல் தடுத்து வைக்கப்படுதல் நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 10

அவர்கள் உரிமைகள் கடப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கெதிராகவுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான நடுநிலை தவறாத நியாய சபையினால் செய்யப்படும் நீதியான பகிரங்கமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரிமையுடையவர்களாவர்.

உறுப்புரை 11

1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்படும் எல்லோரும் பகிரங்க விளக்கத்தில் சட்டத்துக்கிணங்க அவர்கள் குற்றவாளிகளென காண்பிக்கப்படும் வரை சுற்றவாளிகளென ஊகிப்படுவதற்கு ஊகிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். அவ்விளக்கத்தில் அவர்களது எதிரவாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.

2. தேசிய சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லா செய்யால் புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறென்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன் தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12

ஒவ்வொருவரும் அவ்வவரது அந்தரங்கத்துவம் குடும்பம் வீடு அல்லது கடிதப் போக்குவரத்து என்பவை சம்பந்தமாக ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் தலையிடப்படுவதற்கோ அல்லத அவரது மரியாதை நன்மதிப்பு என்பவற்றின் மீதான தாக்குதல்களுக்கோ உட்படுத்தலாகாது. அத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதல்களுக்nகெதிராக ஒவ்வொருவருக்கும் சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுடையவராவர்.

உறுப்புரை 13

1. ஒவ்வொரு நாட் டினதும் எல்லைக்குள் சுதந்திரமாகப் பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

2. தமது சொந்த நாடு உட்பட ஏதேனும் நாட்டை விட்டுச் செல்லவும் தத்தமது நாட்டுக்குத் திரும்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

உறுப்புரை 14

1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும் துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வாய்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும் அலல்து ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15

1. ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்குமுண்டு.

2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பபிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16

1. முழு வயதடைந்த ஆண்களும் பெண்களும் இனம் தேசிய இனம் அல்லது சமயம் என்பன காராணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமண செய்வதற்கும் ஒரு குடு்ம்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும் திருமணம் குலைக்கப்டும் பொழுதும் அவரக்ள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.

2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.

3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17

1. தனியாகவும் வேறெருவருடன் கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18

சிந்தனைச் சுதந்திரம் மனச்சாட்சிச் சுதந்திரம் மதர் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும் போதனை பயில்நெறி வழிபாடு அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும் வேறெருவருடன் கூடியும் பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19

கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலைலீடின்றிக் கருத்துக்களைக் கொண் டிருத்தற்கும் எவ்வழிவகைகள் மூலமும் எல்லைகளைப் பொருட்படுத்தாமலும் தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20

1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.

2. ஒரு கழகத்தினைச் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21

1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.

2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட் டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது காலாலகாலம் உண்மையாக நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும் சமமானதுமாக வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுமென்பதுடன் இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான சுதந்திரமான வாக்களிப்பு நடைமுறைகள் நடைபெறுதல் வேண்டும்.

உறுப்புரை 22

சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஒவ்வொருவரும் சமூகப் பாதுகாப்புக்கு உரிமையுடையவர். அத்துடன் தேசிய முறய்சி மூலமும் சர்வதேசிய நாட்டிடை ஒத்துழைப்பு மூலமும் ஒவ்வொரு நாட் டினதும் அமைப்பு முறைக்கும் வனங்களுக்கும் இணையவும் ஒவ்வொருவரும் தத்தம் மதிப்புக்கும் தத்தம் ஆளுமைச் சுதந்திர முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் இன்றியமையாதவையாக வேண்டப்பெறும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளைப் பெருவதற்கும் உரித்தடையவராவர்.

உறுப்புரை 23

1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான செய்யுந் தொழில் நியாயமானதும் அநுகூலமுடையதுமான தொழில் நிபந்தனைகட்டு உரியோராயிருப்பதற்கான தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.

2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.

4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.

உறுப்புரை 24

இளைப்பாறுகைக்கும் ஓய்விற்கும் ஒவ்வொருவரம் உரிமையுடயர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை சம்பளத்துடனான காலாகால விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25

1. ஒவ்வொருவரும் உணவு உடை வீட்டு வசதி மருத்துவக் காப்பு அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை இயலாமை கைம்மை முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சு10ழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.

2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிலிட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தலை உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி சமமான சமூகப் பாதுகாப்பபினைத் துய்க்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26

1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.

2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படுத்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும் இன அல்லத மதக் குழுவினருக்கிடையேயும் மன ஒத்திசைவு பொறுதியுணர்வு தோழமை ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன் சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். 3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை பெற்றோருக்குண்டு.

உறுப்புரை 27

1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும் கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும் அதன் நன்மைகளிலும் பங்கெடுப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

2. அறிவியல் இலக்கிய கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28

இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக சர்வ தேசிய நாட் டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29

1. எந்த ஒர சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகலிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.

2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும் சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம் பொது மக்கள் ஒழுங்கமைதி பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.

3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30

இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

ஆளகரத்தினம் பாலன்

________________________________________

ரசாயன சாத்தான்கள்- போபால்


ரசாயன சாத்தான்கள்- போபால் - சக்தி செல்லையா

தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அறிவாளிகளாகவும் சோம்பேறிகளாகவும் தான் இருப்பார்கள் போலும். அது அவர்கள் தவறில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். கைப்பேசி கட்டணம் முதல் ஆரம்பித்து பஸ் வசதி, ரயில் வசதி, பொழுது போக்கு இடங்கள், அரசாங்கத்தின் கவர்ச்சியான திட்டங்கள் என்று இங்குள்ள மனிதனின் மூளையை எவ்வித சிந்தனையிலும் ஈடுபட விடாமல் எப்போதும் களிப்படைய வைத்து, மழுங்கடித்த சோற்றுப் பிண்டங்களாகத் தான் வைத்திருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் சுட்டி .டி.வி, சன் டி.வி, சன் மியுசிக், கலைஞர் டி.வி, கே டி.வி என்று தமிழ்நாடே ஒரே குடும்பமாகத் தான் வாழ்கிறது. ஒரே குடும்பமாகத் தான் தூங்குகிறது. தேவையான அனைத்தையும் அரசாங்கமும் இந்த சமூகமும் பல வழிகளில் தந்துவிட்டால் சோம்பேறிகளாகாமல் என்ன செய்வோம்?. எல்லாம் கிடைத்த பின் எதற்கு சண்டை, எதற்கு பித்தலாட்டம்.?.




புரட்சியா?.
எதை நோக்கி?
யாரை நோக்கி?.
உங்கள் கொள்கை?.
அது அடைய இருக்கும் இலக்கு?
என்று கேட்டுவிட்டு,இந்தப் புத்தகத்தை படியுங்கள், அதில் அவர் புரட்சியின் மையம் எதுவாக இருக்க வேண்டும், எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு புத்தகங்களை கண்முன் காண்பித்து விட்டு செல்பவர்கள் அதிகம். இவர்களை எப்போதும் வியந்து கொண்டிருக்கும், தன்னை அறியா அடிமைகளும் அதிகம். புத்தகங்களில் புரட்சியை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பதை படித்து, புரிந்து, சூது, வாது பார்த்து எச்சரிக்கையாக ஒரு படி மேல் சென்று பாதுகாப்பான அரசியல் நகர்வுகளை நடத்துபவர்களும் உள்ளனர். இந்தப் பிரச்சனை என் கொள்கைக்கு புறம்பானது, ஆனால் நியாயமானதாகத் தான் தோன்றுகிறது என்று கூறிக் கொண்டு எதிலும் தலையிடாமல் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஈழயுத்தத்தில் நம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது கூட அரசாங்கம் சொன்ன இடங்களில் போராட்டங்கள், சொன்ன தேதியில் ஊர்வலம், சொன்ன நேரத்தில் அஞ்சலிகள். “OUT OF THE BOX” யாரும் எதுவும் செய்யவில்லை, அங்கே யாரும் பிழைக்கவுமில்லை. இவர்கள் எவரையும் நம்பாமல் புரட்சிகர எண்ணங்களுடன் எதுவும் செய்ய முடியாமல் அல்லது என்ன செய்வது என்று தெரியாமல், வழிநடத்துவதற்கும், கலந்து ஆலோசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் சிதறி கிடக்கும் தனிமனிதர்கள் ஏராளம்.

உங்களால் இவர்களை அடையாளம் காணமுடியுமா?.

நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை என்று பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். ஆனால் நேர்மை எது? நீதி எது? என்ற வரையறுப்பு மாறிவிட்டதால் தமிழ்நாட்டில் அவை எங்கு இருக்கின்றன என்று தெரியாமல் போயிருக்கும். என்னை பொறுத்த வரை மிகப்பெரிய அநியாயத்தை தடுப்பதற்கு கூட நாம் தெருவில் இறங்கா விட்டால், தமிழனாய் வாழ்கிறேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. அப்படி ஒரு அர்த்தமற்ற நாளாகிப் போனது நேற்றைக்கு முந்தைய நாள், ஜூன் 7, 2010.

உங்களுடைய வயதில் இருபத்தைந்து வயதை குறைத்து கொள்ளுங்கள். நான் பிறந்து பத்து மாதங்கள் ஆகியிருக்கும். 1984, டிசம்பர் மாதம், நள்ளிரவில், நடந்தது அந்த சம்பவம். உலகத்தின் மிகப் பெரிய கோர சம்பவம்.


UNION CARBIDE (UCIL) என்ற தொழிற்சாலை, 1969ல் 50.9% UNION CARBIDE CORPORATION (UCC) நிறுவனத்தாலும், 49.1% ஆயிரக்கணக்கான இந்திய முதலீடுகளினாலும் போபாலில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் PESTICIDE CARBARYL மட்டும் தயாரித்துக் கொண்டிருந்தனர்.



பின் 1979ல் METHYL ISO-CYNATE (CONTACT POISON) என்ற விஷவாயுவையும் தயாரிக்கத் தொடங்கினர். 1984, டிசம்பர் 2-3 தேதியில் SHIFT முறைப்படி வேலை மாற்றத்துக்கு அந்த WORKER வரும் முன், இரவு 9:30 மணி அளவில் முந்தைய WORKER ஐ SUPERVISOR கூப்பிட்டு 25 அடி நீளமுள்ள ஒரு பைப்பை தண்னீரால் பாய்ச்சி கழுவ சொல்லியிருக்கிறார். அந்த பைப் TANK E610 மற்றும் TANK E619 உடன் இணைக்கப்பட்டிருந்தது. TANK E610 முழுவதும் 40 நாட்களுக்கு முன்பு 45 டன் METHYL ISO-CYNATE-ஆல் நிரப்பிவைத்துள்ளனர். அதற்கு பிறகு PLANT SHUTDOWN காரணமாக TANK E610வை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் வந்தவர்களுக்கு TANK E610ல் என்ன இருந்தது என்று ஞாபகமில்லாததால் அந்த பைப்பில் தண்ணீரை செலுத்தியுள்ளனர். கூடவே SUPERVISERம் இருந்திருக்கிறார். தண்ணீரை செலுத்தி விட்டு வெப்ப அளவை குறித்துள்ளனர். எப்போதும் போல் 2 PSI (POUNDS PER SQUARE INCH) இருந்துள்ளது. இது சரியான வெப்ப நிலை என்று பதிவு செய்து விட்டு சென்றுள்ளனர்.



இரவு 10:45 மணியளவில் அடுத்த SHIFTற்கு வந்தவர், வெப்ப அளவு 10 PSI இருப்பதை கண்டு NIGHT SUPERVISERடம் தெரிவித்துள்ளார். அவர் சரியாக கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். நள்ளிரவு 12:15 தேநீர் இடைவேளை கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

இரவு 11:30 -12:00 மணி அளவில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்படுவதை அறிந்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் தெரிந்துள்ளது, TANK E610ல் 1.5 டன் அளவு தண்ணீர் கலந்து வெள்ளை நிற ஆவி வெளியேறிக் கொண்டிருப்பதை. வெப்ப அளவோ 40 PSI ஆக இருந்துள்ளது. சரியாக 12:45 மணியளவில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு TANK E610ல் இருந்து 100 அடி உயரத்திற்கு வெள்ளை நிற விஷவாயுவு வெடித்தது. நிலைமையை புரிந்து கொண்டவர்கள் அபாயச் சங்கு மூலம் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்களுக்கு அறிவித்துள்ளனர். பின்பு ஏதோ காரணத்தால், அறிவிப்பை நிறுத்தி விட்டனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து UCILக்கு தொலைபேசி வந்துள்ளது. 1:25 முதல் 2:10 வரை கிட்டத்தட்ட 3 தடவை மீண்டும் தொலைபேசியில் அழைத்துள்ளனர். இரண்டு முறை “EVERYTHING IS OK“ என்று பதிலளித்துள்ளனர். இந்த செய்தியை TIMES OF INDIA வெளியிட்டுள்ளது. METHYL ISO-CYNATEன் விபரீதத்தை அறிந்து சொன்னார்களா, இல்லையா என்று தெரியவில்லை.

நள்ளிரவு 2 மணி அளவில் ஊர் முழுக்க விஷவாயுவு பரவியுள்ளது. மக்கள் அங்கங்கே மூச்சு திணறி இறந்துள்ளனர். ITASI JUNCTIONல் இருந்து BUSHWAL JUNCTIONக்கு சென்று கொண்டிருந்த ரயிலை, ரயில்வே அதிகாரிகள் வழியிலேயே நிப்பாட்டியுள்ளனர். இதைப் போன்று நிறைய ரயில்களை வரவிடாமல் தடுத்து மக்களை அவர்களால் முடிந்த அளவிற்கு காப்பாற்றிய 23 அதிகாரிகளும் காலை 6 மணி அளவில் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்துள்ளனர். ரயில்வே நிலையம் முழுக்க பிணம். எங்கு பார்த்தாலும் பிணம்.

சாலை முழுக்க தப்பிப்பதற்கு ஓடி வந்தவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாபமாய் இறந்துள்ளனர். சாலை முழுவதும் உயிரற்ற மக்கள். தூக்கத்திலேயே பலர் இறந்துள்ளனர். இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் நொடிப் பொழுதில் இறந்திருக்கின்றன.




குழந்தைகள் இறந்தது அம்மாவுக்கு தெரியாமலும், அம்மா இறந்தது குழந்தைக்கு தெரியாமலும், அவரவர் அந்த அந்த இடத்திலேயே மடிந்துள்ளனர்.


விஷவாயுவு தாக்கி கண்களை பறிகொடுத்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. கண்களின் மேலே உள்ள சில பகுதிகளை MIC விஷவாயுவு எரித்து விடுவதால் இப்படி ஒரு அவல நிலை. மூச்சுக்குழாய் அடைப்பு, உடல் உறுப்புகள் விஷவாயுவினால் அழுகிப் போதல் போன்று பல காரணங்களால் மக்கள் இறந்துள்ளனர்.


மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜூன் சிங், தகவல் அறிந்து உடனே விமானம் மூலம் சம்பவம் நடந்த இடத்தை விட்டு வெகு தூரம் பறந்து விட்டார். பாவம் அவர் தான் என்ன பண்ண முடியும். முதலமைச்சராக இருந்தார், தப்பித்து விட்டார்.



காலை 6 மணியளவில் கிட்டத்தட்ட 8000 சடலங்கள். அடுத்த நாள் , நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மேலும் 8000 இருக்கக்கூடும். ஆனால், அரசு 3,750பேர் இறந்துள்ளனர் என்று தவறான கணக்கு கொடுத்தது. மருத்துவமனையில் இடம் இல்லாமல் வாசலிலேயே காத்திருந்து இறந்துள்ளனர். போபால் சம்பவம் உலகம் முழுக்க பரவியது.



அமெரிக்காவில் இருந்து உடனே இந்தியா வந்த வாரன் ஆண்டர்சன் (WARREN ANDERSON, CHAIRMAN, UCIL) கைது செய்யப்பட்டார். பின் 25,000 ரூபாய் ஜாமீன் தொகை கட்டி, டிசம்பர் 7ஆம் தேதி பெயிலில் வெளியேறியுள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் அவரிடம் கேட்கப்பட்டது. 3 வாரத்தில் கூறுவதாக பதிலளித்துள்ளனர் கம்பெனி நிர்வாகிகள். ஆனால் பத்து வாரங்கள் ஆகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. மீண்டும் 3 வாரத்தில் கூறுவதாக கூறியுள்ளனர். சம்பவத்திற்கான காரணத்தை மீண்டும் மீண்டும் கேட்ட போது “OUR REPORTS ARE RESTRICTED” என்று பதிலளித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு பிறகு ஒரு WORKER வேண்டுமென்றே இப்படி செய்துவிட்டார் என்று கூறியுள்ளனர். யார் மீதாவது பழி சுமத்த வேண்டுமல்லவா?. அப்போது தானே தப்பிக்க முடியும். 15,000 பேர் இறப்புக்கு காரணமான அந்த தொழிற்சாலை அன்றுடன் மூடப்பட்டது.

டிசம்பர் 16, 1984ல் “OPERATION FAITH” என்ற பெயரில் TANK E610 மற்றும் TANK E619ல் மிஞ்சியிருந்த விஷவாயுவை செயலிழக்க வைத்தனர். ஒரு வருடம் கழித்து, 1985ல், விஷவாயுவு தாக்கிய அதே நாளில் பெரும் மக்கள் கூட்டம் முதலமைச்சர் அர்ஜூன் சிங் வீட்டை நோக்கி புறப்பட்டுள்ளனர். பல பேர் தங்களால் நடக்க கூட முடியாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.



பல விதமான நோய்களுக்கு உட்படுத்தப்பட்ட அந்த மக்களுக்கு 1989ல் கிடைத்தது எல்லாம் (ஒவ்வொருவருக்கும்) 500 டாலர்.

5 வருடத்திற்கான மருத்துவ செலவு என்று கூறி வழங்கியுள்ளது. மொத்தமாக 470 மில்லியன் டாலரை UCC (UNION CARBIDE CORPORATION) கொடுத்தது. 25 வருடம் ஆகியும் அவர்களுக்கு உண்டான குறைபாடுகள் தீர்ந்தபாடில்லை. இறந்தவர்களை எல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது என்றால் எதுவும் தெரியவில்லை, குடும்பம் குடும்பமாக இறந்தவர்களுக்கு யாரை பார்த்து காசு கொடுக்க முடியும். இதை தொடர்ந்து பல அமைப்புகளால் தொடரப்பட்ட வழக்கை ஒரேடியாக சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

“ACTIVIST” என்ற பெயரில் சுற்றித்திரிந்து போராடிய அனைவரது முகத்திலும் கரியை பூசியது, சுப்ரீம் கோர்ட். அது மட்டுமல்லாமல் 1998ல் போபால் மெமோரியல் மருத்துவமனையும், 500 BED வசதியும், ஒரு ஆய்வுக்கூடமும் UCC, சுப்ரீம் கோர்ட்டின் கட்டளைக்கு இணங்க செய்து கொடுத்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 வருடம் கழித்து ஒரு மருத்துவமனை. 15000 மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு ஒரு மருத்துவமனை, ஒரு ஆய்வுக்கூடம். எதற்காக?. இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும். கேட்பதற்கும் ஆள் கிடையாது. கேள்வி கேட்பவனையெல்லாம் பணத்தால் முகத்தில் அடி. மீண்டும் மீண்டும் கன்னத்தை காண்பித்து கொண்டே இருப்பான் என்று நினைத்தார்களோ என்னவோ?.ஆனால் அப்படியும் கன்னத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் நபர்கள் ஏராளம். இன்னும் கூடிக்கொண்டே தான் போகிறார்கள்.

1999ல் GREEN PEACE நிறுவனம், அமெரிக்காவில் UCC ஐ எதிர்த்து ஒரு வழக்கை தொடர்ந்தது. போபாலில் மூடப்பட்ட அந்த தொழிற்சாலையில் 400 டன் CHEMICALS இருப்பதாகவும், 15 வருடங்களாக அவை, மண்ணுடன் கலந்து, நிலத்தடி நீருடன் கலந்து மீண்டும் பெரிய ஆபத்தை விளைவித்து வருவதாகவும் கூறினர்.

அதை அப்புறப்படுத்தி நஷ்ட ஈடு வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இன்று வரை யாரும் அதை அப்புறப் படுத்தவில்லை. நிலத்தையும் நிலத்தடி நீரையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இதே அரசாங்கம் தான் நதி நீர் பிரச்சனை பற்றியெல்லாம் பேசுகிறது.

2001ல் DOW CHEMICALS நிறுவனம், UNION CARBIDE நிறுவனத்தை 9.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் போபால் தொழிற்சாலையில் தேங்கிக் கிடக்கும் “CHEMICAL WASTESஐ அப்புறப்படுத்துவது பற்றி மறுத்திருக்கிறது. இதே DOW CHEMICALS நிறுவனத்திற்கு “US SECURITIES AND EXCHANGE COMMISSION”, இந்திய அரசாங்க ஊழியர்களுக்கு 200,000 டாலர் லஞ்சம் வழங்கியதற்காக 3,50,000 டாலர் ஃபைன் போட்டது. எல்லோருக்கும் பணம் தேவை தானே, அதில் 2 லட்சம் டாலர் இந்தியனுக்கா, அப்ப எனக்கு? அதை விட அதிகமா என்று 3.5 லட்சம் டாலர் போட்டுள்ளது. கொள்ளை அடிப்பவனிடம் இருந்து தானே கொள்ளை அடிக்க முடியும். பாவப்பட்ட மக்களை தானே கொல்ல முடியும். இதில் சம்மந்தப் பட்ட ஆட்களை அவ்வப்போது ஒரு சிலர் நபர்கள் விட்டு வைத்ததில்லை.

குவாலியரை சேர்ந்த DEFENCE RESEARCH DEVELOPMENT டைரக்டர் விஜயராகவனும், நாக்பூரை சேர்ந்த NATIONAL ENVIRONMENTAL ENGINEERING RESEARCH தலைவரும் போபாலில் உள்ள CHEMICAL WASTESஐ ஆராய்ந்து ”ORALLY INGESTIBLE “ என்று தெரிவித்துள்ளனர். அதாவது, நிலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் அனைத்து பொருட்களிலும், உதாரணத்திற்கு தண்ணீர், காய்கறிகள் போன்றவையுடன் அந்த கெமிக்கல்ஸ் கலந்து விடுவதாகவும், மேலும் வருங்கால சந்ததியருக்கு மற்றுமொரு “BHOPAL TRAGEDY” ஆக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். இன்றுவரை அப்புறப்படுத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் மற்றும் இதர மத்திய அமைச்சர்கள் பலரும் DOW CHEMICALS நிறுவனத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதை “LACKEYS OF DOW CHEMICALS” என்று கூறியுள்ளனர். LACKEYS = FOOTMAN. காலடியில் இருப்பவர்கள் என்று அர்த்தம். நம்ம வீட்டில் காலடியில் விழுந்து கிடப்பவை எவை? என்று உங்களுக்கு சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.

இதெல்லாம் போக, DOW CHEMICALS நிறுவனத்தை பற்றி உங்களுக்கு மேலும் ஒரு தகவலை கூறுகிறேன். DOW CHEMICALS நிறுவனம் “NAPALM” என்ற ரசாயனத்தை தயாரித்து வியட்நாம் போர் நடைபெறுகையில் அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது.



“NAPALM” அணுஆயுதமாக பயன் படுத்தப் பட்டு பல ஆயிரக்கணக்கான வியட்நாம் வீரர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்துள்ளது. உலகத்தையே நடுங்கச் செய்த இந்த “NAPALM”ஐ எதிர்த்து பல வடிவங்களில் போராட்டங்கள் தோன்றியும் DOW CHEMICALS நிறுவனம் இதை தயாரிப்பதை நிறுத்தவில்லை.


இதே போல் “AGENT ORANGE” என்ற கொடூரமான ரசாயனத்தையும் தயாரித்துள்ளது. “AGENT ORANGE”ன் விளைவு கற்பனையிலும் எட்டாதது. அமெரிக்க ராணுவம், ஹெலிகாப்டரில் இந்த “AGENT ORANGE”ஐ வியட்நாம் காடுகளில் பெருமளவு தூவியுள்ளனர்.


காடுகளை அழித்து அதன்மூலம் ஒளிந்திருக்கும் எதிரிகளையும், கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து குண்டுகள் சரியான இடத்தை அடைவதற்கும் இது செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.



ஆனால், இந்த ரசாயனம் காடுகளை அழித்தது மட்டுமல்லாமல், மண்ணோடு கலந்து FOOD CHAINலும் கலந்து விட்டது. உணவினில் கலந்ததின் விளைவு ஊனமுற்ற குழந்தைகள்.



2005ல், இதனால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்கள் DOW CHEMICALS நிறுவனத்தின் மீதும், MANSANTO என்ற அமெரிக்க நிறுவனத்தின் மீதும் வழக்கை தொடர்ந்தது. இந்த MANSANTO நிறுவனமும் “AGENT ORANGE”ஐ தயாரித்துள்ளது. இதே நிறுவனம் நம் தமிழ்நாட்டிலும் விதை உற்பத்தி பண்ணுவதில் ஈடுபட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே விளைச்சலை கொடுக்கும் விதைகளை உருவாக்கி கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் நம் ஊர்க்காரர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பல கோடிகளை கொடுத்து எந்த வித பிரச்சனையிலும் சிக்காமல், பலரது வாயை அடைத்திருக்கும் DOW CHEMICALS நிறுவனம், போபால் கெமிக்கல்ஸ்களை அப்புறப்படுத்தவில்லை. ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.

இன்றும் நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 2008ல் பாதிக்கப் பட்டவர்கள், மத்திய பிரதேசத்திலிருந்து டெல்லி வரை 900 கி.மீ தூரம் நடந்து சென்று, தங்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டிருக்கின்றனர். அதற்கும் பதிலில்லை. இந்த மக்களுக்கு அரசாங்கம் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஜூன்,7, 2010 அன்று தீர்ப்பு வழங்கியது.

போபால் சம்பவத்துக்கு காரணமான எட்டு குற்றவாளிகளுக்கும் 2 வருடம் ஜெயில் தண்டனை. நபருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நஷ்டஈடும், UCC நிறுவனத்திற்கு 5 லட்சமும் அபராதமாம். இதில் 25,000 ரூபாய் கட்டி பெயிலில் செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். சென்றுவிட்டனர்.

இந்த தண்டனையை கோடி கோடியாக லஞ்சம் வாங்கிய அதிகாரிகளே இவர்களுக்கு பதிலாக கட்டிவிடலாம். 25,000 மக்கள் இறந்திருக்கின்றனர். 1,20,000 க்கும் மேற்பட்டோர் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்படும் நீதி இரண்டு வருடம் ஜெயில் தண்டனை. இதை வழங்கிய நீதிபதி தான் மக்கள் மத்தியில் இன்றைய முதல் குற்றவாளி.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது இந்த போபால் சம்பவம். காங்கிரஸ் ஆட்சியில் தான் தீர்ப்பும் வருகிறது. அப்போது ராஜீவ் காந்தி, இப்போது சோனியா காந்தி. அப்போது இந்திராகாந்தி அம்மையார் இறந்து அதன் மறுநாள் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட 32 நாள் கழித்து இந்த சம்பவம் நடந்தது. ஒரு வேலை தொழிற்சாலையை சுற்றி சீக்கியர்கள் இருந்தனரோ தெரியவில்லை. ஆனால் அப்போதெல்லாம், இது மாதிரியான ஆபத்தான கெமிக்கல்ஸை அமெரிக்கா தன் சொந்த நாட்டில் உற்பத்தி செய்தது இல்லை. வேறு ஏதாவது மூன்றாம் உலக நாடுகளில் தான் சோதனை செய்யும். அப்போது தான் அங்கு வாழும் மக்களின் மீதும் சோதனை செய்யலாம். இதற்கு அந்த அந்த நாடுகளின் தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம். இருந்து தானே ஆக வேண்டும். போபால் சம்பவம் நடந்து முடிந்த பிறகு, இவ்வுளவு ஆபத்தான தொழிற்சாலையில் இந்த கெமிக்கல்ஸை ( METHYL ISO CYNATE) தயாரிக்க வேறு வசதி கொண்ட இயந்திரம் இருக்கும் போது ஏன் அதை பயன் படுத்தவில்லை? என்று கேட்ட போது இந்தியாவில் அதிக அளவில், குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்ற காரணத்தால் அதை உபயோகப் படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். ஆக நம் மக்களையும் மூன்றாம் உலக நாட்டு மக்களாக பாவித்து இச்செயல் செய்யப்பட்டதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.

இப்போது தீர்ப்பு என்று ஒன்று வந்திருக்கிறது. நாளை இதுவே மேல்முறையீட்டிற்கு செல்லும். மேல்முறையீட்டிற்கு செல்வதற்குரிய காரணம், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார்கள். கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இவர்களை சமாதான படுத்த என்ன செய்யலாம்?. தீர்ப்பை மறு விசாரனை செய்யலாம். செய்வது மாதிரி வழக்கை ஒத்தி வைக்கலாம். இன்னும் வழக்கை ஜவ்வாக இழுக்கலாம். மக்களின் போராட்ட குணமும் காணாமல் போய்விடும், வீரியமும் குறைந்து விடும். அதற்குள் மீதமுள்ள 7 குற்றவாளிகளும் இறந்துவிடுவர் அல்லது விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இறந்து விடுவர். அடுத்து வழக்கும் இறந்துவிடும். இவர்கள் விட்டுச்சென்ற கெமிக்கல்ஸும், இதற்காக பெரும் புழக்கத்தில் கிடந்த பல கோடிகளும் தான் மிஞ்சும். அதன் பின் இந்த பணத்தை அபகரிக்க சில அரசுசாரா நிறுவனங்கள் (NGO) தோன்றும். பல ஒட்டுண்ணிகள் சமுதாய தொண்டு என்ற பெயரில் நாடு முழுவதும் வலம் வருவார்கள். இப்படியே முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும்.

இத்தனை வருட காலத்தில், 25,000 பேர் இறந்த குடும்பத்தில் இருந்தோ அல்லது 1,20,000 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலிருந்தோ ஒருவர், ஒரே ஒருவர் கூட தீவிரவாதத்தை கையில் எடுக்கவில்லை, ஒருவருக்கு கூட கோபம் உச்சத்தை தொடவில்லை என்றால், அம்மக்கள் எப்படிப்பட்ட கீழ்தங்கிய நிலையில் இருந்திருப்பார்கள் அல்ல எப்படி அடிமை படுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.


ராஸ்ட்ரிய ஜனத்தா தல் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சில தினங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில், “என் கட்சியில் நிறைய தொண்டர்கள் துப்பாக்கியுடன் அலைகிறார்கள், இது எனக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். ஐயா ஒரு காலத்தில் எப்படி அலைந்தார் என்பது வேறு. ஆனால் துப்பாக்கியுடன் திரியும் ஒரு தொண்டன் கூடவா போபால் சம்பவத்தில் பாதிக்கப் படவில்லை. முதலாளித்துவத்தை எதிர்த்து போராடிய அமைப்புகள் இன்றும் தீவிரமாகத் தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கூட இவர்களின் முதலாளித்துவ அரசியல் தெரியவில்லையா?.

2006ல் போபாலில் ராஜ்பவனை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலோனர் காந்திய வழியில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

"It is the Government's duty to provide safe drinking water".



மகாத்மா காந்தி படங்களை எடுத்துக் கொண்டு சுத்தமான குடிநீர் வேண்டும், மருத்துவ வசதிகள் வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே சென்றுள்ளனர். போலீஸார் எப்போதும் போல் பாதி வழியிலேயே போராட்டத்தை நிறுத்திவிட்டனர். எப்போதும் போல் மக்களும் கூட்டம் கூட்டமாக பேசிவிட்டு சென்றுள்ளனர். ஆக, காந்திய வழி போராட்டமும் காலத்தால் பின் தங்கிய போராட்டமாக மாறிவிட்டது. மிச்சமிருப்பது ஒன்று தான்.

- சக்தி செல்லையா